Agri Students Win First Prize for Drone Technology Paper
தத்தனூர் M. R. பொறியியல் கல்லூரியில் "A MIC Driven Active -AI for Atmanirbhar Bharaft"பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் "A MIC Driven Active-AI for Atmanirbhar Bharat -HEI Pro Summit Engagement towards India AI Impact Summit 2026" விழிப்புணர்வு விரிவுரை நடைபெற்றது. வேளாண் பொறியியல் துறை தலைவர் முனைவர் தே. அருள் ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம். ஆர்.இரகுநாதன் , இயக்குனர் முனைவர் ஆர். இராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் முனைவர். க. செந்தில்குமரன், முதல்வர். முனைவர். ப. பழனிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்டம் Allwin Pipes and Drip lrrigation நிறுவனத்தின் டீலர் திரு. வி. பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். இது குறித்து மாணவர்களிடம் Atmanirbhar Bharat நோக்கில் செயற்கை நுண்ணறிவு AI தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம், வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் AI பயன்பாடுகள், தானியங்கி பாசன அமைப்புகள், தரவு பகுப்பாய்வு மற்றும் ஸ்மார்ட் விவசாய முறைகள் , முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர் கல்வி நிறுவனங்கள் AI ஆராய்ச்சி, தொழில் துறை இணைப்பு, மற்றும் புதுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். India AI Impact Summit 2026 எதிர்நோக்கி கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், புதுமை தயார்நிலைக்கு திறமையான மனித வளம், தரவு தரநிலைகள் மற்றும் நெறிமுறை அடிப்படைகள் அவசியம். செயல்விளக்கம் காட்சியின் மூலம் AI அடிப்படையிலான வேளாண் மற்றும் தொழில் நுட்ப பயன்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பல கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்பாக பேசினார். விழா ஏற்பாடுகளை வேளாண் பொறியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பேராசிரியர். நா. கவிநிலவு நன்றியுரை ஆற்றினார்