Grand State-Level School Drawing Competition at MREC

Grand State-Level School Drawing Competition at MREC

தத்தனூர் M. R. பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கானமாநில அளவிலான ஓவியப்போட்டி ரூபாய் 22000 பரிசுகள் வழங்கப்பட்டது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் M. R. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் M.R.அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கானமாநில அளவிலான ஓவியப்போட்டி கல்லூரி கலையரங்கத்தில் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம். ஆர்.இரகுநாதன் , இயக்குனர் முனைவர் ஆர். இராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் முனைவர். க. செந்தில்குமரன், முதல்வர். முனைவர். ப. பழனிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தோடு, பள்ளி மாணவ, மாணவியர்களைப் பங்குபெறச் செய்து ஓவியப்போட்டி நடைபெற்றன. மாநில அளவிலான ஓவியப்போட்டியில் 100-க்கு மேற்பட்ட பள்ளியில் இருந்து 5000-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு மொத்தம் ரொக்கம் 22,000/- ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்