MREC Partners with Unique MEP Engineering for Student Training

MREC Partners with Unique MEP Engineering for Student Training

தத்தனூர் M.R. பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை Unique MEP Engineering Pvt. Ltd., புரிந்துணர்வு ஒப்பந்தம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூரில் இயங்கும் Meenakshi Ramaswamy Engineering College மற்றும் Unique MEP Engineering Pvt. Ltd., சென்னை ஆகியவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எம்.ஆர். பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் க. செந்தில்குமரன் முன்னிலையில், முதல்வர் முனைவர் ப. பழனிவேல், இயந்திர பொறியியல் துறைத்தலைவர் திரு. த. தங்கபாலு,மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைத்தலைவர் திரு. பாரதி ராஜா,சிவில் பொறியியல் துறைத்தலைவர் திருமதி. சாந்தி பிரியா,வேளாண் பொறியியல்துறைத்தலைவர் முனைவர் அருள் ராஜசேகரன் மற்றும் Unique MEP Engineering Pvt. Ltd., சென்னை நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, எம்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி, திறன் மேம்பாட்டு பட்டறைகள், இன்டர்ன்ஷிப், தொழிற்சாலை பார்வை, மதிப்புக்கூட்டப்பட்ட (Value Added) பாடநெறிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாடு பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், மேலும் மேம்பட்ட கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தற்போதைய தொழில் நடைமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப திறன்களை வளப்படுத்துதல் தொழில்முறை தரநிலைகளின் கீழ் நிறுவனம்-தொழில் ஒத்துழைப்பை ஆதரித்தல், செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொழில்துறைக்கு தேவையான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை பெற்று தங்களது கல்வித் தரத்தையும் வேலைவாய்ப்பு திறனையும் உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.