MREC Partners with Unique MEP Engineering for Student Training
தத்தனூர் M. R. பொறியியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா கல்லூரி கலையரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முனைவர். க. செந்தில்குமரன், முதல்வர். முனைவர். ப. பழனிவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து துறைகளிலும் உள்ள 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் சிறுதானிய உணவான கம்பு, கேழ்வரகு, ராகி, சோளம், தினை, சாமை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில், லட்டு, பாயாசம், ராகி, வடை, உப்புமா, கூழ், அடை, தோசை, இட்லி, அல்வா, முறுக்கு, பக்கோடா, அவியல், புட்டு, சுழியம், சிமிளி, சாமை, சத்துமாவு புட்டு, இதுபோன்ற 300க்கு மேற்பட்ட சிறுதானிய உணவு செய்து வந்து, அதற்கான முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளித்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுதானிய உணவு செய்து வந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் சீதா மற்றும் மாணவ, மாணவியர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.