Students Win Prizes at Inter-College Technical Symposium
மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெரம்பலூரில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்ப கருத்தரங்கில் நமது மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில், ஆய்வுக் கட்டுரை விளக்க காட்சி நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் கி.விஷால், கு.தமிழ்மணி, சி.ஜெகன், பெ.தர்மராஜா இரண்டாம் இடமும், மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவர்கள் சே.கவியரசி, மா.முத்துப்பாண்டி, அ.அசோக்குமார் மூன்றாம் இடமும் மற்றும் வினாடி வினா போட்டியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் கு.தமிழ்மணி மூன்றாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர்கள் எம்.ஆர்.இரகுநாதன் அவர்கள், மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் முனைவர் க.செந்தில்குமரன் அவர்கள், முதல்வர் முனைவர் ப.பழனிவேல் அவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் இருபால் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.